கோவில் பற்றி

ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் கோவில், ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புனிதமான வழிபாட்டு இடமாகும். இதில் ஸ்ரீ மதுரை வீரன், ஸ்ரீ பெரியாண்டவர், மற்றும் ஸ்ரீ சின்னாண்டவர் சுவாமிகள் ஆகிய தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர். இந்த கோவில், சமுதாயத்தின் ஆன்மீக மையமாக இருந்து, கலாச்சார மரபுகள், திருவிழாக்கள் மற்றும் தெய்வீக சேவைகளை பாதுகாத்து வருகிறது.

கோவில் நிர்வாகம்

ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் குடிபாடு அறக்கட்டளை

  • தலைவர் / தலைவர்:
    மு. பெரியண்ணன்
    📞 +91 9443833711
  • செயலாளர்:
    ஜி. கணேசன்
    📞 +91 9942306595
  • பொருளாளர்:
    டி.பி.எஸ். செந்தில்
    📞 +91 9087343983
நன்கொடைகள்

பக்தர்கள் கோவிலின் மறுசீரமைப்பு மற்றும் செயல்பாடுகளுக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நன்கொடைகளை கோவில் நிர்வாகிகளிடம் வழங்கி ரசீது பெற்றுக்கொள்ளவும், அல்லது நேரடியாக அறக்கட்டளை கணக்கிற்கு அனுப்பவும்:

  • கணக்கு பெயர்: ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் குடிபாடு அறக்கட்டளை
  • கணக்கு எண்: 110050329647
  • வங்கி: கனரா வங்கி, திருப்பைஞ்சிலி கிளை
  • IFSC: CNRB0001289
Scan & Pay QR Code

Scan & Pay - UPI மூலம் தங்களது நன்கொடைகளைக் கீழுள்ள QR கோடு மூலம் நேரடியாக வழங்கலாம்.

ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மனின் அருளுடன், நீங்கள் கலந்து கொண்டு, நன்கொடை வழங்கி, எங்கள் கோவில் சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்க வரவேற்கிறோம்.

மறுசீரமைப்பு குழு உறுப்பினர்கள்
என். சங்கர் (குரு), என். ராஜா (குரு), எஸ். சிவகுமார் (குரு), டி. அரியநாதன் (பட்டையார்), ஜி. ஹரிகிருஷ்ணன், டி.பி.எஸ். பாபு, சி. ராஜேந்திரன், எம். செல்வராஜ், பி. சேகர், எஸ். ரெங்குபிள்ளை, ஏ. நாகரத்தினம், டி. பாலசுப்ரமணியன், ராஜேந்திரன் சாந்தி, சி. சுவாமிநாதன், சி. செல்வராஜ், சி. ராஜேந்திரன், சி. சேகர், ஜி. சண்முகம், ஏ.பி. சக்திவேல், பி. மணிகண்டன், பி. சிவராஜா, என். சுரேஷ், டி. ரவிச்சந்திரன், டி. அன்பழகன், பி. ராஜா, பி. உமா மகேஸ்வரன், பி. ரவிச்சந்திரன், ஜி. சம்பத், எஸ். கோபி, எஸ். விக்கி, பி. கோபிகிருஷ்ணன், எம். அருண், ஜி. சங்கர், பி. ராஜ்குமார், எஸ். ஹரிஹரன் மற்றும் அனைத்து உறுப்பினர்கள்.
நிகழ்வுகள் & அறிவிப்புகள்
  • 25 ஆக்டோபர் 2024
    அருள்மிகு அன்னகாமாட்சி அம்மன் அருள்மிகு பெரியாண்டவர் அருள்மிகு சின்னாண்டவர் கோயில் (கோயில் வீடு)
    திருப்பைஞ்சீலி (தெற்கு தெரு) மண்ணச்சநல்லூர் வட்டம், திருச்சி மாவட்டம்.

    நம் குலம் காக்கும் குல தெய்வங்களான ஸ்ரீஅன்ன காமாட்சியம்மன், ஸ்ரீபெரியாண்டவர், ஸ்ரீசின்னாண்டவர் கோவில்கள் புதியதாக புனரமைப்பு வேலைகள் செய்து மகா கும்பாபிஷேகம் நடத்த 6.4.2025 அன்று குடி பாட்டு பங்காளிகள் மற்றும் மாமன் மைத்துனர் முன்னிலையில் அன்னை காமாட்சி அம்மனிடம் உத்தரவு கேட்கப்பட்டதில் அன்னை காமாட்சி வழங்கிய உத்தரவுக்கு இணங்கி கோயில் வீடு புனரமைப்பு மற்றும் கும்பாபிஷேகம் திருப்பணி நடத்த ரூபாய் ஐம்பது லட்சம் முதல் 1 கோடி வரை செலவாகும் என்ற சூழ்நிலையில் நம் குலதெய்வ குடிபாட்டு பங்காளிகள் மற்றும் மாமன் மைத்துனர் அனைவரும் கருத்து வேறுபாடுகள் கலைந்து ஒருமித்த கருத்துடன் ஒருமனதாக ஒன்று சேர்ந்து திருப்பணியில் பங்கேற்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தி தர தங்கள் ஒத்துழைப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    10.04.2025 அன்று நடந்த சிறப்புக் கூட்டத்தில் தற்போதைய சூழலில் ரூ 50,00,000 (ஐம்பது லட்சம்) என்ற திட்ட மதிப்பீட்டில் திருப் பணி நடத்திடவும், வரும் காலங்களில் கோயில் வீடு திருப்பணி வளர்ச்சிப் பணிக்காகவும் திருப்பணி நிதியாக (குடும்ப தலைக்கட்டுவரி) ரூ 10,000 (பத்தாயிரம்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் நம் குல தெய்வ குடிபாட்டு பங்காளிகள் குடும்பங்கள் குறைவாக உள்ளதால் திருப்பணி செலவுகள் அதிகமாகும் என்ற சூழ்நிலையில் திருப்பணியின் அதிகபட்ச செலவினங்களை மனதில் கொண்டு குடிபாட்டு பங்காளிகள் அனைவரும் குடும்ப நிதி (வரி) ரூ 10,000 மற்றும் அதிகபட்ச நிதியாக தாராளமாக (நிதி மற்றும் பொருளுதவி) வழங்கி கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

    நம் தலைமுறையில் நமக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாக இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி நம் குல தெய்வ குடிபாட்டு பங்காளிகள், மாமன் மைத்துனர், நம் தலைமுறையினர் மற்றும் வருங்கால புதிய தலைமுறையினர் அனைவரும் இன்மை மறுமையிலும் அனைத்து செல்வங்களையும் பெற்று வளமோடு வாழ அனைவரையும் திருப்பணியில் பங்கேற்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்திக் கொடுக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    முக்கிய குறிப்பு:
    1. குடி பாட்டு பங்காளிகளின் திருமணமான ஆண் குழந்தைக்கு (ஆண் வாரிசுகள்) முழு தலைக்கட்டுவரியும் , பெண் பிள்ளைகளுக்கு (பெண் வாரிசுகள்) பாதி தலைக்கட்டுவரியும் உள்ளதால் தாங்கள் தங்கள் குடும்பம் சார்பில் நிதி மற்றும் பொருளுதவி வழங்கி கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    2. மாமன் மைத்துனர் அனைவரும் தங்கள் பங்களிப்பை (நிதி மற்றும் பொருளுதவி) வழங்கி திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தி தர தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
    3. திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் செலவினங்கள் அதிகரிக்கும் என்பதனை மனதில் கொண்டு தங்களால் இயன்ற வரை தாராளமாக நிதி உதவி மற்றும் பொருளுதவி வழங்கி கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    4. குலதெய்வ குடிபாட்டு பங்காளிகள் மற்றும் மாமன் மைத்துனர் அனைவரும் தங்கள் திருப்பணி சார்ந்த நிதி மற்றும் பொருளுதவிகளை முடிந்த வரை கால தாமதமின்றி வழங்கி ஒத்துழைப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    5. குலதெய்வ குடிபாட்டு பங்காளிகள் மற்றும் மாமன் மைத்துனர்கள் தங்களுக்கு தெரிந்த வெளியூர் மற்றும் வெளிநாட்டு பங்காளிகள் குடும்பங்கள் பற்றி தகவல் தொடர்பு இருந்தால் அவர்களுக்கும் குல தெய்வ கோயில் திருப்பணி குறித்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
    6. கோவில் வீடு புனரமைப்பு மற்றும் கும்பாபிஷேகம் திருப்பணி நிதியைக் நேரடியாக அல்லது கோயில் வங்கி கணக்கில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளவும்.
    7. நமது குல தெய்வ குடிபாட்டு பங்காளிகள் குடும்பங்கள், குல தெய்வ கோயில் தொடர்பு இல்லாமல் இருந்தாலோ, திருப்பணி குறித்தும் தங்கள் பங்களிப்பு குறித்தோ தகவல் தெரியாமல் இருந்தால் நீங்கள் உங்கள் மூலம் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
  • புகைப்படங்கள் — 11 செப்டம்பர் 2025
    11 செப்டம்பர் 2025 - படம் 1
  • வீடியோக்கள் — 11 செப்டம்பர் 2025
  • வீடியோக்கள் — 10 செப்டம்பர் 2025
  • திங்கள், 9 செப்டம்பர் 2025
    அனைவருக்கும் வணக்கம்
    ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன்
    ஸ்ரீபெரியாண்டவர்
    ஸ்ரீசின்னாண்டவர்
    ஸ்ரீதனிக்கருப்பு சாமி
    ஸ்ரீ மதுரை வீரன் துணை

    வரும் நிகழ்வு:
    பூமி பூஜை அறிவிப்பு
    வருகின்ற வியாழக்கிழமை நாளன்று 11.09.2025 காலை 9 மணி அளவில் நம் கோயில் வீடு புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜை நடைபெறுகிறது. ஆகையால் அனைத்து பங்காளிகளும் மாமன் மைத்துனர்களும் குடும்பத்தோடு கலந்து கொள்ளவும்.
    இப்படிக்கு திருப்பணி கமிட்டி
  • புகைப்படங்கள் — 9 செப்டம்பர் 2025
    9 செப்டம்பர் 2025 - படம் 1
  • ஞாயிறு, 8 செப்டம்பர் 2025
    அனைவருக்கும் வணக்கம்.
    நம் குல தெய்வ கோவில் வீட்டில் புதியதாக திருப்பணி வேலைகள் தொடங்கப்பெற்று நடைப்பெற்று வரும் நிலையில் குடும்ப குடிபாட்டு வரி மற்றும் நன்கொடை வழங்கிவரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
    இதுவரை குடிபாட்டு வரி மற்றும் திருப்பணி நிதி வழங்காத பங்காளிகள் மற்றும் மாமன் மைத்துனர்கள் அனைவரும் ‌ விரைந்து வழங்கி திருப்பணியில் தங்கள் பங்களிப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    திருப்பணி வேலைகள் சார்பாக நன்கொடைகள், பொருளுதவிகள் தாராளமாக வழங்கி குல தெய்வ கோயில் திருப்பணியில் பங்கெடுத்து தங்கள் பங்களிப்பை வழங்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.
  • வீடியோக்கள் — 9 செப்டம்பர் 2025
  • சனி, 6 செப்டம்பர் 2025
    திருப்பணி மற்றும் நன்கொடை அறிவிப்பு
    ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன்
    ஸ்ரீபெரியாண்டவர்
    ஸ்ரீசின்னாண்டவர்
    ஸ்ரீதனிக்கருப்பு சாமி
    ஸ்ரீ மதுரை வீரன் துணை

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் திருப்பைஞ்சீலி தெற்கு தெருவில் அமைந்துள்ள கோவில் வீட்டில் இருந்து அருள்பாலிக்கும் நம் குலம் காக்கும் குல தெய்வ கோவில் வீட்டில் புதியதாக திருப்பணி (புதியதாக கோவில் வீடு கட்டி) கும்பாபிஷேகம் நடத்த முடிவுகள் செய்யப்பட்டு முதற் கட்டமாக 21.08.2025 மற்றும் 22.08.2025 இரு நாட்களில் பாலாலயம் விழா மிகச் சிறந்த முறையில் நடத்தி முடிக்கப்பெற்று கோவில் வீடு கட்டுமான ஆயத்தப் பணிகள் தொடங்கப் பெற்றுள்ளது.
    கோவில் வீட்டு குடிபாட்டு பங்காளிகள் மற்றும் மாமன் மைத்துனர்கள் தங்கள் குடிபாட்டு வரி மற்றும் திருப்பணி நன்கொடைகள் வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
    இதுவரை குடிபாட்டு வரி மற்றும் திருப்பணி நிதி வழங்காத பங்காளிகள் மற்றும் மாமன் மைத்துனர் அனைவரும் உடனடியாக விரைந்து வழங்கி திருப்பணியில் தங்கள் பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
    நம் முன்னோர்கள் செய்த நற்பயன் மற்றும் ஆசிர்வாதங்களால் நமக்கு கிடைத்த மிகப்பெரிய பொன்னான இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி நம் குல தெய்வ கோவில் வீட்டின் திருப்பணியில் பங்கெடுத்து நம் தலைமுறையினர் மற்றும் வருங்கால தலைமுறையினர் அனைவரும் நாளும் நாள் உயர்வதோர் நன்மையை பெற அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    முக்கிய குறிப்பு:
    நம் குல தெய்வ கோயில் புதுப்பித்தல் மற்றும் கும்பாபிஷேகம் திருப்பணிக்கு தலைக்கட்டு வரி மற்றும் நன்கொடைகள், பொருளுதவிகள் தாராளமாக வழங்கி கோவில் வளர்ச்சி பணியில் தங்கள் பங்களிப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
  • வீடியோக்கள் — 8 செப்டம்பர் 2025
  • ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2025
    நன்றி: எங்கள் குலதெய்வக் கோவிலில் நடைபெற்ற பலாலயம் திருவிழாவை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
    வரும் கூட்டம்: கோவிலில் நடைபெறும் புதிய புதுப்பிப்பு பணிகள் தொடர்பாக, ஸ்தபதி மற்றும் பொறியாளருடன் ஆலோசனை கூட்டம் ஞாயிறு, 24 ஆகஸ்ட் 2025 மாலை 7:00 மணிக்கு கோவில் வளாகத்தில் நடைபெறும். அனைத்து குலதெய்வ குடிபாடு உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
  • சனி, 24 ஆகஸ்ட் 2025
    புதுப்பிப்பு தகவல்: நேற்று இரவு தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர், பொறியாளர், ஸ்தபதி மற்றும் பழைய கட்டடத்தை அகற்றும் பணியாளருடன் சந்தித்தனர். பணிகள் தொடங்க ரூ. 10,000 முன்பணம் வழங்கப்பட்டது.
  • புகைப்படங்கள் — 22 ஆகஸ்ட் 2025
    22 ஆகஸ்ட் 2025 - படம் 1
  • வீடியோக்கள் — 24 ஆகஸ்ட் 2025
  • வியாழன், 21 ஆகஸ்ட் 2025 (ஆவணி மாதம், திரயோதசி திதி, பூசம் நட்சத்திரம்)
    வரும் திருவிழா: பலாலயம் திருவிழா
    நேரம்: காலை 10:30 – 11:30 (சுபயோக, சுபதினம், அமிர்த யோகம் – துலாம் ராசி)
    தெய்வங்கள்: ஸ்ரீ மதுரை வீரன், ஸ்ரீ பெரியாண்டவர், ஸ்ரீ சின்னாண்டவர் மற்றும் பங்காளிகள்
    ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மனின் அருளைப் பெற அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
  • புகைப்படங்கள் — 21 ஆகஸ்ட் 2025
    21 ஆகஸ்ட் 2025 - படம் 1 21 ஆகஸ்ட் 2025 - படம் 2 21 ஆகஸ்ட் 2025 - படம் 3 21 ஆகஸ்ட் 2025 - படம் 4 21 ஆகஸ்ட் 2025 - படம் 5 21 ஆகஸ்ட் 2025 - படம் 6 21 ஆகஸ்ட் 2025 - படம் 7 21 ஆகஸ்ட் 2025 - படம் 8 21 ஆகஸ்ட் 2025 - படம் 9 21 ஆகஸ்ட் 2025 - படம் 10 21 ஆகஸ்ட் 2025 - படம் 11
  • புகைப்படங்கள் — 20 ஆகஸ்ட் 2025
    20 ஆகஸ்ட் 2025 - படம் 1 20 ஆகஸ்ட் 2025 - படம் 2 20 ஆகஸ்ட் 2025 - படம் 3 20 ஆகஸ்ட் 2025 - படம் 4
  • ஞாயிறு, 15 ஜூன் 2025
    சிறப்பு பூஜை: மாதாந்திர அமாவாசை அபிஷேகம்
    நேரம்: காலை 8:00 மணி முதல்
    அனைவரும் கலந்து கொண்டு அருள் பெற அழைக்கப்படுகிறார்கள்.
  • நடந்து கொண்டிருக்கிறது
    கோவில் புதுப்பிப்பு: மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. உங்கள் ஆதரவை நாங்கள் பாராட்டுகிறோம்!